27 ஏப்ரல், 2010

இலங்கையைச் சேர்ந்த 75 பேர் தத்தளித்த படகில் இருந்து தரையிறக்கப்பட்டனர்

மலேசிய அரசு தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இரண்டு நாள்கள் படகில் இருந்து இறங்க மறுத்த இலங்கையைச் சேர்ந்த 75 பேர் மலேசிய போலீஸக்ஷ்ரால் தரையிறக்கப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த மீன் பிடிப் படகு ஒன்று 75 பேரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. அப்போது படகில் ஓட்டை ஏற்பட்டதால் மலேசிய கடல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த மலேசிய காவல் துறையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தினர்.

முதலில் அவர்கள் அனைவரும் படகில் இருந்து இறங்க மறுத்தனர். தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக் கொண்டால்தான் படகை விட்டு இறங்குவோம் என கோரிக்கை வைத்தனர்.

இரண்டு நாள்கள் படகிலேயே இருந்தனர். பின்னர் போலீஸக்ஷ்ர் படகுக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து அவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து வடக்கு பினாங்கு மாகாண கடற்படை காவல் அதிகாரி ரோஸ்லி சுஃபியான் கூறுகையில், "அந்தப் படகு மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. படகு மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களை மூழ்க விடாமல் தடுப்பது எங்கள் நோக்கம். படகை ஓட்டி வந்தவர் எங்களைப் பார்த்ததும் தப்பித்துச் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறோம். அவர்கள் அகதிகளா அல்லது ஆள் கடத்தலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களா என்பது பற்றி விசாரணை செய்ய சட்ட விரோத குடியேற்றத் தடுப்பு மையத்தில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

அவர்களிடம் ஏதேனும் உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். மற்றொரு குழுவாக மலேசியா வந்த இலங்கையைச் சேர்ந்த 36 பேரை பெராக் மாகாணப் பகுதியில் போலீஸக்ஷ்ர் வெள்ளிக்கிழமை கைது செய்ததாகவும், இவர்களுடன் வந்த இரண்டு மலேசியர்களும் கைது செய்ப்பட்டுள்ளனர் எனவும் ரோஸ்லி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக