28 ஏப்ரல், 2010

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு





போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு
திரைப்படம் திரைப்படம்
பெங்களூர், ஏப். 28-

நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருக்கும் காட்சி வெளியானதை அடுத்து அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து அவர் மீது சென்னை போலீசிலும், கர்நாடக போலீசிலும் பலர் புகார் கொடுத்தனர். நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதியில் இருந்ததால் சென்னையில் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து நித்யானந்தா மீது கர்நாடக போலீசார் கற்பழிப்பு, மோசடி, மத உணர்வை புண்படுத்துதல், சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். மாநில சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

தன் மீது புகார் வந்ததை அடுத்து நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் நகரில் பதுங்கி இருப்பதை கர்நாடக போலீசார் கண்டுபிடித்து கடந்த 21-ந் தேதி கைது செய்தனர்.

பின்னர் 22-ந் தேதி அவரை கர்நாடகாவுக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரிடம் முழுமையான விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர். கோர்ட்டு முதலில் 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தது. ஆனால் நித்யானந்தாவிடம் முழுமையாக விசாரணை முடியாததால் நேற்று முன்தினம் மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

ஆனால் நித்யானந்தா திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். எனவே நேற்று முன்தினம் மாலை அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அவருக்கு இ.சி.ஜி. எக்கோ கார்டியோ கிராம், டிரட்மில் டெஸ்ட் ஆகிய இதய தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு பயந்து நாடக மாடி இருக்கிறார் என்று தெரிய வந்தது.

எனவே நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் மீண்டும் அவரை காவலுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

ஆனால் நித்யானந்தா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். ஆசிரமத்தில் நடந்த செக்ஸ் விவகாரம், பெண்களுடன் ஏற்படுத்திய செக்ஸ் ஒப்பந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. போலீசார் நெருக்கடி கொடுத்து கேட்ட போது எதுவும் பேசாமல் மவுனம் சாதித்தார்.

இந்த நிலையில் இன்று மாலையுடன் அவரது போலீஸ் காவல் முடிகிறது. எனவே அவரை மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், அதன் பிறகு அவர் ஜெயில் காவலில் வைக்கப்படுவார்.

அவரிடம் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் மேலும் 1 வாரம் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே போலீஸ் காவல் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக் காததால் அவரிடம் மயக்க மருந்து கொடுத்து நடத்தப் படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கும் கோர்ட்டில் அனுமதி பெற உள்ளனர்.

உண்மை அறியும் சோதனை நடத்தினால் எதையும் மறைக்க முடியாது, மனதில் புதைந்து இருக்கும் அனைத்து தகவலும் வெளியே வந்துவிடும். அப்போது ஆசிரமத்தில் நடந்த அத்தனை விவகாரங்களும் வெளியே வரும் வாய்ப்பு உள்ளது.

போலீசார் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் பெண் செயலாளர் கோபிகா ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது தலை மறைவாக உள்ளனர். அவர்கள் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்களை எந்த நேரத்திலும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தலாம்.

நித்யானந்தா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.

எனவே அதுவரை ஜெயிலுக்கு செல்லாமல் தப்பிக்கவே அவர் நெஞ்சு வலி நாடகம் நடத்தி ஆஸ்பத்திரிக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அவருடைய திட்டம் ஈடேறவில்லை.

ஒரு வேளை இன்று போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதிக்கவில்லை என்றாலும் இன்று மாலையே அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக