30 ஏப்ரல், 2010

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வக்கீல்கள் தகவல்





சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து வந்த பிரபாகரனின் தாயார் திரும்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை கோர்ட்டில் நீதிபதி தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:-

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய-மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக