28 ஏப்ரல், 2010

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கருணாவின் அலுவலகம்


இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் வழங்கப்படுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 60,000 பேர் வரையிலேயே உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்குவதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயம் தொடர்பாக இலங்கைக்கு இருந்த சர்வதேச அழுத்தங்களை முற்றாக இல்லாதொழிப்பதும் எமது நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும். இவ்வாறான அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ளமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மீளக்குடியேற்ற பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கருணா அம்மான் நேற்று கொள்ளுப் பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கட்டடத்தில் நாளை வியாழக்கிழமை முதல் பிரதியமைச்சர் கருணா அம்மானின் அலுவலகம் இயங்கவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் அமைச்சு அலுவலகம் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னாலுள்ள மீள்குடி யேற்ற அமைச்சு கட்டடத்திலேயே இயங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக