28 ஏப்ரல், 2010

நீண்ட நாள் மருத்துவ விசா: ஜப்பான் திட்டம்


ஜப்பானில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விரும்பும் வெளிநாட்டவருக்கு, நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போதுள்ள விசா நடைமுறைகளின் படி, ஜப்பானில் மருத்துவசிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர் குறுகிய கால சுற்றுலா விசா மூலம் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இத்தகைய விசாவுக்கான கால வரம்பு 90 நாட்கள் மட்டுமே.

இதற்கு மேல் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், அவர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு மருத்துவசிகிச்சை பெறுபவர்களுக்கான நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த ஜப்பான் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இப் புதிய விசா நடைமுறையின் மூலம் விசா நீட்டிப்புக்கு அவர்கள் விண்ணப்பிக்க தேவையிருக்காது.

சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து தரமான சிகிச்சை விரும்பி வருபவர்களை அதிக அளவில் ஈர்க்கவும், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் இத்தகைய விசா நடைமுறை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் அறிவிக்கப்படவுள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்களில், இந்த நீண்ட நாள் மருத்துவ விசா நடைமுறையும் அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக