30 ஏப்ரல், 2010

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் உரியவரிடம் கையளிப்பு : ஆளுநர்


புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லட்சம் சைக்கிள்கள் என்பன உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது பொதுமக்கள், புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சைக்கிள்களே உரியவர்களிடம் படிப்படியாக கையளிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி போர் அனர்த்தங்களின்போது சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுச் சென்றவர்கள், பொலிஸ் அறிக்கையின் போட்டோ பிரதி இரண்டு, அடையாள அட்டை 2 பிரதி, வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் இரு பிரதி மற்றும் ஆவணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 5000 மோட்டார் சைக்கிள்களும் 7 ஆயிரம் சைக்கிள்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக