27 ஏப்ரல், 2010

ஐக்கிய தேசியக் கட்சிப் பதவிகளில் விரைவில் மாற்றம்

ஐக்கியத் தேசியக் கட்சியை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்போது பிரதான பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றங்கள் இடம்பெறும் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் குறித்து அடுத்த மத்திய குழுக் கூட்டத்தின் போது ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களின் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரு,சஜீத்,ரவி : சிரேஷ்ட, பிரதி, உப தலைவர்கள்?

தற்போது பிரதித் தலைவராக பணியாற்றி வரும் கரு ஜயசூரிய, சிரேஷ்ட பிரதித் தலைவராக பதவி உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சஜித் பிரேமதாச இதற்கு இதுவரை தமது இணக்கப்பாட்டை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரவி கருணாநாயக்காவின் பெயரும் கட்சியின் உப தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையில், முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும் அதில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக