வீடியோ காட்சிகள் தொடர்பில் இலங்கைமீது விசாரணை : எரிக் சொல்ஹெய்ம் -
அரசு மறுப்பு இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வேக்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
"இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை.
இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை.
எனினும் இந்தக் காணொளி போன்ற ஆதாரங்கள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன.
இலங்கை அரசுக்கு எதிரானவர்கள் வெள்ளை வேன் மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளை வேன் கடத்தலுக்கு அதிகம் ஆளாகின்றனர்" என்றார்.
அரசாங்கம் கடும் எதிர்ப்பு
நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை இராணுவத்தினர் தமிழர்களை நிர்வாணமாக்கி சுட்டுப் படுகொலை செய்யும் வீடியோ காட்சிகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
நட்புறவு ரீதியான நோர்வே அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வேதனையளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சொல்ஹெய்ம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த காலங்களில் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சொல்ஹெய்ம் மிக முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சனல்-4 அலைவரிசை வெளியிட்ட சில காட்சிகள் தொடர்பில் நோர்வே வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல எனவும், உறுதிப்படுத்தப்படாத ஒரு வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிடப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக