29 ஆகஸ்ட், 2009

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது : கோத்தபாய
முறியடிப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ரீ 623 ஐ சயு ரல' என பெயரிடப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றை நேற்று உத்தியோகபூர்வமாக கடற்படையினரிடம் கோத்தபாய ராஜபக்ஷ கையளித்தார்.

திருகோணமலை, கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில், கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.



பயிற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டினுள் ஊடுருவுதல், மற்றும் ஆயுத கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பணிகளைக் கடற்படையினர் முனைப்புடன் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் அங்கு வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக