27 பிப்ரவரி, 2010


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மேமாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் கடனுதவியை தாமதப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக சர்வதேச நாணயநிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆய்வுப்பணிகள் எதிர்வரும் மே மாதமளவில் பூர்த்தியாகுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக