27 பிப்ரவரி, 2010

வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காகஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சி
 

வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சியொன்றை இத்தாலி ஒன்றுபட்ட சிங்கள ஒன்றியம் என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் சிங்களவரின் உரிமைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை விற்பனைசெய்ய ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடும் ஒன்றியம் எதிர்வரும் 28ம் திகதி ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் குறித்த புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புத்தக விற்பனைமூலம் கிடைக்கும் முழுப்பணமும் வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளைப் புனரமைக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழ் பகுதிகளில் பௌத்த பிரசன்னத்தை அதிகரிக்கும் வகையில் அரசாங்கமும் இராணுவத்தினரும் புதிது புதிதாக பௌத்த விகாரைகளை அமைத்துவரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிங்கள சங்கங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக