அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய
இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த கோத்தபாய, பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்படவில்லையென்றும் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய முடிவின்படி அவரது இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இராணுவப் பிரிவுகளுக்கும் அரசியலுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. _

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக