27 பிப்ரவரி, 2010

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனைகைகொடுக்கும்

ஜனாதிபதி மீலாத் செய்தி

சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :-

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து மீலாதுன் நபியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முஹம்மது நபி பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவரின் போதனைகளை நினைவு கூரும் ஒரு தினமாகும். சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, தர்மம் என்பன பல உயர் விழுமியங்களை புனித நபி அவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்.

இலங்கையில் மீலாதுன்நபி விழா தேசிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இந்தத் தேசிய கொண்டாட்ட ங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் இடம்பெறுகின்றது. அங்குள்ள முஸ்லிம் மக்களின் சமய மற்றும் கலாசாரச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. இலங்கை முழுவதும் ஜனநாயகம், மீள ஸ்தாபிக்கப்பட்டு சமாதானமும் நிலைநிறுத் தப்பட்டுள்ள நிலையில் அமைதியான சூழலில் இம்முறை முஸ்லிம்கள் மீலா துன் நபியைக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முக்கிய தினத்தில் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நான் எனது மனப்பூர்வ மான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள் கிறேன். அத்தோடு சமாதானம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை சகல சமூகங்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவும் அவற்றை ஸ்திரப்படுத்தவும் தீவிர பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக