27 பிப்ரவரி, 2010

நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதிமன்றங்கள் : சட்ட மறுசீரமைப்பு அமைச்சுத்திட்டம்




நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்துக்கு செலவிட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 மேல் நீதிமன்றங்கள் 16 மாவட்ட நீதிமன்றங்கள் 19 நீதவான் நீதிமன்றங்கள் 12 சுற்றுலா நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

நீதிமன்றங்களின் அதிகாரப் பிரிவுகளை நிர்ணயிக்கும் குழுவின் சிபாரிசுக்கு ஏற்ப இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த நான்கு வருடங்களில் மாகாண மட்டத்தில் 17 மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக