27 பிப்ரவரி, 2010

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துமற்றுமொரு அடிப்படை உரிமை மீறல்மனு இன்று கொழும்பு உச்சநீதிமன்றில்


நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல்மனு இன்று கொழும்பு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் செயலாளர் சர்மிளா பெரேராவினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நான்கு தேர்தல் தொகுதிகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், அத்தேர்தல் தொகுதிகளின் வாக்கெடுப்பு சூன்யமாக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மற்றும் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக