27 பிப்ரவரி, 2010

முஹம்மது நபியின் வழிகாட்டல் எமது தாய் நாட்டுக்கு அவசியம்


மீலாத் தின செய்தியில் பிரதமர்
மனித சமூகத்திலே சமாதானம், சகவாழ்வு என்பவற்றினை ஏற்படுத்திய மாபெரும் தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் புனித மக்கமாக நகரில் நபிகளார் பிறந்தார்கள்.

அன்னார் சிறு வயதிலேயே பல கஷ்டங்களுக்கு முகம்கொடுத்த போதிலும் உண்மையை மாத்திரம் பேசக்கூடியவர்களாக காணப்பட்டார்கள்.

பிஅல் அமீன்பீ என்று அன்னார் அக்காலத்தில் அழைக்கப்பட்டார். அவர் மீதான நம்பிக்கையினை பிரதிபலிக்கும் வகையிலே இந்தச் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.

அதனூடாக அன்னார் முஸ்லிம்களிடையே நம்பிக்கையினையும் உண்மையினையும் வளர்ப்பதற்கு பாடுபட்டார்.

அவ்வாறான நற்குணங்களைக் கொண்டவர்களின் வழிகாட்டல்கள் இன்று எமது தாய்நாட்டிற்கு தேவைப்படும் காலமாகும். பல தசாப்தங்களாக நாட்டையும் மக்களையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கிய பயங்கரவாதம் எனும் இருள் அகன்று புதியதோர் பாதையில் எமது தாய்நாடு பயணிக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது மேலும் இன்றியமையாததாகக் காணப்படுகிறது.

தத்துவ ஞானியாகவும், சமய வழிகாட்டியாகவும், நற்போதகர் ஒருவராகவும் மற்றும் மனிதர்களை மிகவும் கருணையுடன் நேசிக்கக் கூடிய ஒருவராகவும் காணப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவுகூர்வதன் மூலம் காலத்தின் தேவையாக காணப்படும் மனித பக்தியின் பக்கம் அவதானம் செலுத்த முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் ஞாபகார்த்த தினத்தில் இணைவதன் மூலம் இஸ்லாம் சமயத்தின் மனிதாபிமான பண்புகளை கொள்கை ரீதியாக பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

பல்லாயிரம் ஆண்டு காலமாக மக்களின் மனதில் அழியாது குடிகொண்டுள்ள போற்றத்தக்க மனிதர்கள் பலர் உள்ளனர்.

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவ்வாறான அரியதோர் மனிதராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக