ஒரேயொரு தமிழரையும் ஐ.தே.க. கைகழுவியது
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மாகாண சபை உறுப்பினர் வை. ராமும் இடம்பெற்றிருந்தார். கொழும்பு வடக்கு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டியலில் இடம்பெற்ற இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தமிழ் வேட்பாளர்.
ரவி கருணாநாயக ஏற்கனவே கொழும்பு வடக்கு அமைப்பாளராகக் கட்சியினால் நியமிக்கப்பட்டிருந்தார். ராமின் பெயர் கொழும்பு வடக்கு வேட்பாளராகப் பட்டியலில் இடம்பெற்றால் தான் போட்டியிடப் போவதில்லை என்று ரவி கருணாநாயக பிடிவாதமாகக் கூறியதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்ஹ ராமின் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். இதன் பின்னரே ரவி வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இட்டார். கட்சியின் ஒரேயொரு தமிழ் வேட்பாளரையும் ரணில் கைகழுவி விட்டுவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக