27 பிப்ரவரி, 2010

இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிகளவிலான பாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுமெனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த ஏனைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதல்வரின் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலர், அவரது பாதுகாப்பு நீக்கப்படவில்லை, பாதுகாப்பமைச்சின் முடிவுக்கமைய அவரது இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இராணுவப் பிரிவுகளுக்கும் அரசியலுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக