18 ஏப்ரல், 2010

தீர்வு என்று வரும்போது அனைவருடனும் பேசவேண்டும்:டியூ

தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு தேசியப் பிரச்சினை. தமிழ் மக்களின் பிரச்சினை என்பதால் தமிழ்க் கட்சிகளுடன் கட்டாயம் பேசப்படவே வேண்டும். ஆனால், தீர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசித்தான் தீர்வு காண வேண்டும்.

தமிழ் மக்கள் ஆதரிக்கும் கட்சிகளுடன் என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஆதரிக்கும் கட்சிகளுடனும் பேசப்பட வேண்டும். அந்த வகையில் எமது கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எமது கட்சிப் பிரதிநிதிகள் தமிழ்பேசும் மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால், தேசியப் பிரச்சினை என்று வரும்போது அனைவருடனும் பேசப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர் என்பதற்காக அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூற முடியாது. நாங்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியான நாம் இன,மத,பிரதேச வேறுபாடுகள் கடந்த நிலையிலேயே செயலாற்றுகிறோம்.

ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் பேசியே ஆக வேண்டும். இதனையே மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துடன் புலிகளோ பிரபாகரனோ பிரச்சினைகளை உருவாக்க வில்லை.

பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின. பிரச்சினை ஒன்று இருந்ததால்தான் இவ்வாறான அமைப்புகள் உருவாகின என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக