18 ஏப்ரல், 2010

பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கான விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை-





யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான உங்கள் நுழைவாயில் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச கண்காட்சி யாழ். மத்திய கல்லூரியில் இன்றுகாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்குறித்த உறுதியினை அளித்துள்ளார். அத்துடன் இந்தியாவிற்கும் தலைமன்னாருக்குமிடையிலான கப்பல் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய விசா விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளும் நிலையமொன்று எதிர்வரும் மேமாதம் 5ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

வடபகுதி மக்களின் இந்தியப் பயணத்திற்கான விசா விண்ணப்பங்களை சேகரித்து கொழும்புக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையையையும், கொழும்பிலிருந்து வரும் விசாக்களை வடபகுதியில் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் இந்த நிலையம் ஈடுபடும். மேலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குவதிலும் இந்தியா முன்நிற்கும் எனவும் அசோக் கே காந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக