18 ஏப்ரல், 2010





புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் பிரிவினைவாத சக்திகள் குறித்து புதிய பாராளுமன்றம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் புலிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புலி சார்பானவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே அரசின் பிரதான இலக்காகும். பிரிவினைவாதத்தை தூண்டும் சகல சக்திகளையும் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் மற்றும் ஏனைய விளைவுகளைக் கருத்திற் கொள்ளாது இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு தரப்பும் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்தகால அரசுகள் கடுமையான நடவடிக்கைளை எடுத்திருந்தால் புலிகளின் போராட்டம் 30ஆண்டுகளுக்கு நீடித்திருக்காது. புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசுக்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எனவே பல்வேறு வழிகளில் காணப்படும் பிரிவினைவாத சக்திகளை இல்லாதொழிக்க புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக