18 ஏப்ரல், 2010

ஐஸ்லாந்தின் எரிமலை வெடித்தமையால் ஐரோப்பிய நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் இரத்து-





ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையர்கள் அவர்கள் பயணிக்கவுள்ள வானூர்திகள் குறித்து அந்தந்த வானூர்தி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விசாரித்து அறிந்ததன் பின்னர் வானூர்தி நிலையத்திற்கு வருமாறு கோரப்பட்டுள்ளனர். இந்தக் கோரிக்கையை கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலைய பிரதான பணிப்பாளர் எச்.எஸ்.ஹெட்டியாராய்ச்சி விடுத்துள்ளார். ஐஸ்லாந்தின் எரிமலை வெடித்தமையையடுத்து ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக உலகெங்கிலும் சுமார் 17,000 வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கான வானூர்திகள் சேவையில் ஈடுபடுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே தாம் செல்லவுள்ள வானூர்தியின் முகவர் அல்லது உரிமை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு விசாரித்ததன் பின்னரே பயணிகள் வானூர்தி நிலையத்திற்கு வருமாறு பயணிகள் கோரப்பட்டுள்ளனர். இதனால் வானூர்தி நிலையத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க முடியுமென வானூர்தி நிலைய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதுவரையில் இலங்கையிலிருந்து ஆரம்பிக்கவிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான ஆறு வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக