18 ஏப்ரல், 2010

கூட்டமைப்புடன் பேசி தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்-சுரேஷ்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தலைமை என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பதை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, வன்னி போன்ற இடங்களில் கூட்டமைப்பைத் தவிர வேறு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது தலைமை சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை நியாயபூர்வமாக தீர்க்க விரும்பும் எவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனேயே பேசவேண்டும். இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர் களும் தமிழ் உறுப்பினர்களும் தமது கருத்து வேறுபாடுகளை தமிழினத்தின் நன்மை கருதி மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட அவர், மேலும் தெரிவிக்கையில், தொடர்ந்தும் நாம் பிரிந்திருப்போமானால் தமிழினம் மென் மேலும் சிதறுண்டு போவதற்கே வழிவகுக்கும் என்று தெரிவித்த அவர், ஒற்றுமை பற்றி அனைத்துத் தரப்பினரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பை தமிழ் மக்களின் சார்பில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத் திருந்தது. அந்த விஞ்ஞாபனத்துக்கு தமிழ் மக்கள் தமது அங்கீகாரத்தைத் தேர்தல் முடி வுகள் மூலம் வழங்கியுள்ளனர். இதனை அரசாங்கம் புரிந்து, உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விவகாரத்துக்குத் தீர்வுகாண முன்வரவேண்டுமென்றும் வேண்டு கோள்விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக