18 ஏப்ரல், 2010

பதவிகளுக்காக மு.கா. சோரம் போகாது;தேசியபட்டியலில் இரு இடங்களை ஐ.தே.க.வழங்கியாக வேண்டும்:ஹக்கீம்

ஜனாதிபதியோ, ஆளும்தரப்பினரோ அரசாங்கத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியை அரசுடன் சேருமாறு அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதாக நான் கருதுகிறேன்.

கண்டி மாவட்டத்தில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் எனது செல்வாக்கை இல்லாமல் செய்து என்னைப் பின்னடையச் செய்வதற்கு அல்லது தோல்வியடைய வைப்பதற்கானதொரு சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

அத்துடன் பதிவிகளுக்காக எமது கட்சி ஒருபோதும் சோரம் போகவும்மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எம்மை ஏளனப்படுத்தவும், மலினப்படுத் தவுமே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக எமக்குக் கிடைக்கக் கூடிய இரண்டு தேசியல் பட்டியல் எம்.பிக்களை இல்லாமல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை எம்முடன் முரண்பட வைக்கும் சதியும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளது.

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சி

இதுவரை வெளியிடப்பட்ட எமது தேர்தல் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் எமது கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாளை மறுதினம் நடை பெறவுள்ள மீள்வாக்களிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எனக்கு வாக்களிக்காமல் செய்வதற் கான ஒரு முயற்சியாகவுமே இதனைப் பார்க்கிறேன்.

பதவிகளுக்காகச் சோரம் போகமாட்டாம்

நாங்கள் இந்த நாட்டில் ஒரு பலம்வாய்ந்த கட்சியாகவுள்ளோம். சிறுபான்மை மக்களுக் காகவே நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறோம். வெறும் பதவிகளுக்காகச் சோரம்போக மாட்டோம். எவரும் கண்ணி யமான முறையிலேயே எம்முடன் பேசவேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சிறுபான்மைச் சமூகங்களையும் அணைத்துக் கொண்டே சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குமான நோக்கத்தில் ஜனாதிபதி சிறுபான்மைக் கட்சிகளுடன் பேசவேண்டுமென்றால் அதனை நாம் வரவேற்போம்.

இதனை விடுத்து அவர்களது தேவைகளுக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் எம்மை இணைத்துக் கொண்டு கறிவேப்பிலையாகப் பயன்படுத்த லாமென அவர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலம் வாய்ந்த கட்சி. அது தனது சுய கௌரவத்தை ஒருபோதும் இழக்கமாட்டாது.

அரசியல் உயர்பீடம் நாளை அவசரமாகக் கூடுகிறது

குறிப்பிட்ட விவகாரம் தொடர்பிலும் எமது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும்“ எமது கட்சியின் அரசியல்பீடம் நாளை கண்டி யில் அவசரமாகக் கூடுகிறது. தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பிலும் இங்கு ஆராயப்படவுள்ளது.

தேசியப்பட்டியலில் இருவருக்கு இடம் வழங்கவே வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் செய்து கொண்ட எழுத்து மூல ஒப்பந்தத்தின்படி எமக்கு இரண்டு தேசியப்பட்டியல் எம்பிக்கள் வழங்கப்படவேண்டும். இதில் மீண்டும் ஒரு பேச்சுவார்தைக்கு இடமில்லை. அவர்கள் தந்தேயாக வேண்டும்.

இந்த விடயத்தில் அந்தக் கட்சி எம்மை கௌரவிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பலமான கட்சி நாம் என்பதனையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த நல்லுறவைப் பேணவேண்டுமாயின் அவர்கள் எமக்கு வழங்கிய வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றவேண்டும்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் பேசியுள்ளோம். மீண்டும் பேச்சுவார்தை நடத்துவோமென அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறானதொரு பேச்சுவார்த் தைக்கு இடமில்லை. அவர்கள் கூறியபடி இரண்டு ஆசனங்களைத் தந்தேயாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக