18 ஏப்ரல், 2010

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ பாக். உளவுத்துறை உதவி; ஐ.நா. விசாரணைக்குழு குற்றச்சாட்டு




பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலை குறித்து ஹெரால்டோ முனோஷ் தலைமையிலான ஐ.நா, குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த தீவிரவாதிகள் காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ உதவி வருகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்ற பாகிஸ்தானின் ராணுவம் உதவி செய்தது. அதுபோன்ற நடவடிக்கையை தான் கடந்த 1989 முதல் இந்தியாவிலும் கடைபிடித்து வருகிறது.

அதன் அடிப்படையில் தான் 1989-ம் ஆண்டில் இருந்து காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அவை உதவி செய்து வருகிறது. அது இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவற்றில் லஷ்கர்- இ-தொய்பா ஈடுபட்டுள்ளது. இந்த தீவிரவாத இயக்கம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக