18 ஏப்ரல், 2010

அமெரிக்க - ஜப்பான் உறவுக்கு சோதனைக் காலம்

அமெரிக்காவுக்கும் அதன் பிரதான ஆசிய அணியான ஜப்பானுக்கும் இடையிலான அறுபத்தைந்து வருட பழமை வாய்ந்த உறவின் எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து ஆட்சி புரிந்த லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்து ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கேள்விக்கு உள்ளாகின்றது.

இரண்டாவது உலக யுத்தத்தில் தோற்றுச் சரணடைந்த ஜப்பானை அமெரிக்கா மிக இலகுவில் தனது கட்டுப்பாட்டக்குள் கொண்டு வந்தது. ஆசியாவில் தனது செல்வாக்கை வலுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தில் அன்று முதல் ஜப்பான் பிரதான தளமாக விளங்கியது.

ஜப்பானின் அரசியலமைப்பை அமைதி அரசியலமைப்பு (டஹஷடுக்டுஙூசி இச்டூஙூசிடுசிசீசிடுச்டூ) எனக் கூறுவர். இது இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் ஜப்பானுக்காக அமெரிக்க வரைந்த அரசியலமைப்பு. எப்போதும் ஜப்பான் தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு ஏற்ற வகையிலேயே அமெரிக்கா இந்த அரசியலமைப்பை வரைந்தது. ஜப்பானின் இராணுவம் யுத்தம் புரியும் இராணுவமாக அல்லாமல் சடங்காசார (இடீஙுடீஙிச்டூடுஹங்) இராணுவமாக இருக்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு வலியுறுத்தியது. இதனால், 2007ம் ஆண்டு வரை ஜப்பானில் பாதுகாப்பு அமைச்சு இருக்கவில்லை. ஜப்பானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே எடுத்து வந்தது.

ஒக்கினாமா கடற்படைத் தளம்

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் 1951ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. பின்னர் அது 1960ம் ஆண்டு திருத்தப்பட்ட போது, ஜப்பானில் உள்நாட்டுக் கலகங்களும் குழப்பங்களும் இடம்பெறும் பட்சத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு இடமளிக்கும் சரத்து நீக்கப்பட்டதெனினும் மூல ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்த பல இரகசிய சரத்துகள் அவ்வாறே இருந்தன. அமெரிக்கக் கடற்படையின் அணு ஆயுதக் கப்பல்கள் ஜப்பானின் கடற்பரப்பில் நடமாடலாம் என்பதும் ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்களுக்கான பராமரிப்புச் செலவை ஜப்பான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் இரகசிய சரத்துகளுள் அடங்குபவை.

தாகிச்சி நிஷியாமா (பஹகூடுஷகீடு சடுஙூகீடுஞிஹஙிஹ) என்ற ஊடகவியலாளர் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திலுள்ள நான்கு இரகசிய சரத்துகள் பற்றி 1971ம் ஆண்டு பத்திரிகையொன்றில் எழுதியதற்காக ஜப்பான் அரசாங்கம் அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. அரச இரகசியங்களைப் பெறுவதும் வெளியிடுவதும் ஜப்பானில் பாரதூரமான கிரிமினல் குற்றங்கள்.

பொருளாதார வல்லரசாக வளர்ச்சியடைந்த ஜப்பான் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் முற்றுமுழுதாக அமெரிக்காவில் தங்கியிருப்பது நாட்டின் சுயாதீனத்துக்கும் இறைமைக்கும் இழுக்கு என்ற உணர்வு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சை உருவாக்கும் முடிவுக்கு லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வந்தது. அதற்கான சட்டம் 2006 டிசம்பர் 15ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2007 ஜனவரி 9ந் திகதி பாதுகாப்பு அமைச்சு செயற்படத் தொடங்கியது. இந்த முடிவையிட்டு அமெரிக்கா அதிருப்தி அடைந்த போதிலும் ஜப்பானில் பதவியிலுள்ள கட்சியின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அதை வெளிப்படுத்தவில்லை.

பராக் ஒபாமா

2009 ஓகஸ்ட் 30ந் திகதி ஜப்பானில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 1955ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்து ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தது. யுகியோ ஹதோயாமா (வசீகூடுச் ஏஹசிகீச்ஞிஹஙிஹ) பிரதமராகப் பதவியேற்றார். இவர் லிபரல் ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான இசிரோ ஹதோயாமாவின் (ஐஷகீடுஙுச் ஏஹசிகீச்ஞிஹஙிஹ) பேரப்பிள்ளை. யுகியோ ஹதோயாமாவும் தனது அரசியல் வாழ்க்கையை லிபரல் ஜனநாயகக் கட்சியிலேயே ஆரம்பித்தவர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. பதவிக்கு வந்ததும் ஜப்பானில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சமத்துவமற்ற ஒப்பந்தங்களை ரத்துச் செய்வதாகவும் பிரசாரம் செய்தது. ஜப்பான் ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்பிரசாரம் முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கப் படைத்தளங்களை ஜப்பானிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் பெரும்பாலான ஜப்பானியர்கள் உடன்பாடானவர்களாகவே உள்ளனர்.

ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசாரமும் புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான நகர்வுகளும் அமெரிக்காவுக்குக் கசப்பான சமிக்ஞைகளாக இருந்தன.

ஐரோப்பிய யூனியனைப் போல, ஆசிய நாடுகளின் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்துடன் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் சில நகர்வுகளை மேற்கொண்டது. சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படையினருக்கு சண்டை சாராத டூச்டூ ஷச்ஙிஸஹசி உதவிகளுக்காக இந்து சமுத்திரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜப்பானின் கடற்படையைப் புதிய அரசாங்கம் திரும்ப அழைத்தது. அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து பில்லியன் டொலர் உதவித் திட்டமொன்றையும் அறிவித்தது.

யுகியோ ஹதோயாமா

புதிய அரசாங்கத்தின் மக்களாணை எவ்வாறாயினும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதும் அமெரிக்காவின் படைத்தளங்களை உடனடியாக அகற்றுவதும் ஹதோயாமா அரசாங்கத்துக்கு இலகுவான காரியமல்ல. ஒக்கினாமா தீவில் பூடென்மா (ஊசீசிடீடூஙிஹ) நகரிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை அகற்றுவதிலேயே அரசாங்கம் இப்போது கூடுதலான கவனம் செலுத்துகின்றது.

ஒக்கினாவா கடற்படைத் தளம் அமெரிக்காவைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானிலுள்ள 53,000 அமெரிக்கப் படையினரில் 75 வீதத்தினர் ஒக்கினாவா தளத்திலேயே உள்ளனர். கிழக்கு ஆசியாவில் அமெரிக்க படைபலத்தின் கேந்திர ஸ்தானமாக ஒக்கினாவா தளம் விளங்குகின்றது.

ஒக்கினாவா தளத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்த பின்னணியில், இத்தளத்தைத் தீவின் வட பகுதியிலுள்ள நாகோ (சஹகிச்) நகருக்கு மாற்றும்படி லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் சில வருடங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒக்கினாவா தளத்தை ஜப்பானிலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்கின்றது ஜப்பான் ஜனநாயகக் கட்சி அரசாங்கம். அதற்கு அமெரிக்கா உடன்படுவதாக இல்லை. கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இத்தளம் அத்தியாவசியமானது எனக் கூறுகின்றது அமெரிக்கா. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக நிற்கின்றன.

ஒக்கினாவா தளத்தை ஜப்பானுக்கு வெளியே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் பிரதான கூட்டரசாங்க அணியான சமூக ஜனநாயகக் கட்சி அச்சுறுத்துகின்றது. இக்கட்சி அதன் ஆதரவை விலக்கிக் கொண்டால் ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும்.

இந்த நிலையில் ஒக்கினாவா தளம் ஜப்பானிலிருந்து அகற்றப்படுமா அல்லது அமெரிக்கா அதன் வழமையான பாணியில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்யுமா என்ற கேள்வி எழுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக