18 ஏப்ரல், 2010

மும்பை தாக்குதல் விசாரணை: ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

மும்பை தாக்குதலை விசாரித்து வரும் ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது.

நீதிபதி மாலிக் முகமது அக்ரம் விடுப்பில் சென்றுள்ளதால் வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கும்.

வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதற்கு நீதிபதி விடுப்பில் சென்றுள்ளதே காரணம்.

அவர் என்ன காரணத்திற்காக விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறித்து தெரியவில்லை என்று குற்றவாளிகள் தரப்பிலான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

பாதுகாப்பு நலன் கருதி குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அதிலா சிறைக்குள்ளேயே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக