27 மார்ச், 2010

மெனிக்பான் முகாமில் தங்கியிருந்த மேலுமொரு தொகுதி மக்கள் மீள்குடியமர்வு, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர்கள் படகுடன் கைது






வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த ஒருதொகுதி இடம்பெயர்ந்த மக்கள் இன்றையதினம் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1150பேர் இன்றையதினம் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மேலுமொரு தொகுதி இடம்பெயர்ந்த மக்கள் நாளையதினம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 23 இலங்கைத் தமிழர்களை தமிழகப் பொலிசார் நேற்று கைதுசெய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முகாம்களில் வசித்து வந்துநிலையில் இவர்கள் இலங்கைசெல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகுகளின் மூலம் தப்பிச்செல்ல முயன்றதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த 23பேரும் கைதுசெய்யப்பட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடல் எல்லைப் பகுதிவரை செல்வதற்காக இவர்களிடமிருந்து 5000ரூபா இந்தியப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக