27 மார்ச், 2010

வாக்கு முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதி


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்குமுடிவுகளை அறிவிக்கும் நிலையத்தின் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மத்திய நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பவ்ரல் அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது. தேர்தல் தொடர்பில் இதுவரை 214வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக