இந்திய எல்லைக்கு பாகிஸ்தான் கூடுதல் படைகளை அனுப்பி உள்ளதாக லண்டனில் உள்ள அந்நாட்டு தூதர் வாஜித் ஷாம்சுல் ஹசன் தெரிவித்தார்.
லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதன் காரணமாகவே இந்திய எல்லைக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவுடன் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் முழுத் திறமையையும் பாகிஸ்தானால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் பலவீனமாக இருக்கக் கூடாது என்பதையும் பாகிஸ்தான் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
ஆனால்,இந்தியாவின் நெருக்குதல் காரணமாக எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் முழு பலத்தோடு எங்களால் செயல்பட முடியவில்லை. இந்திய எல்லையில் அமைதி நிலவ வேண்டும்.
அப்போது தான் தலிபான்களுக்கு எதிராக சிறப்பாக போரிட முடியும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பதற்றத்தைக் குறைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் நாங்கள் அழைப்பு விடுத்தாலும் எந்தவொரு நாடும் இது குறித்து இந்தியாவிடம் பேச மறுக்கிறது என்றார் அவர்.
இந்திய எல்லைக்கு கூடுதல் படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற நோக்கத்தில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து ஆயுதப் பயிற்சி அளித்து வருகிறது பாகிஸ்தான்.
அதேநேரத்தில் சர்வதேச
நாடுகளிடம் தான் நல்ல பிள்ளை போல் வேஷம் போடுகிறது.
தான் அமைதிக்குத் தயாராக இருப்பது போலவும் இந்தியாதான் அமைதிப் பேச்சுக்கு முன்வருவதில்லை என்றும் பிரசாரம் செய்து வருகிறது பாகிஸ்தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக