27 மார்ச், 2010

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியில் 75% நிறைவு


நவம்பரில் முதல் கப்பல் பயணிக்கும்
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்மாணப் பணிகளில் 75 வீதமானவை நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் தோண்டப்பட்ட துறைமுகப் பகுதியில் கடல் நீர் நிறைக்கப்படவுள்ளதோடு நவம்பர் மாதத்தில் முதலாவது கப்பல் இங்கிருந்து பயணிக்கவுள்ளது. நீர் முழுமையாக நிறப்பப்பட முன்னர் நீரில் இறங்கி விளையாட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக பணிகளை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக 40 வருடங்கள் பிடிக்கும் என்று குற்றஞ்சாட்டிவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அன்றைய தினம் நீரில் விளையாட வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அவர் கூறுவது போலன்றி நவம்பர் மாதத்திற்கு முன் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படும்.

துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பாரிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக 35 கம்பனிகள் முன்வந்துள்ளன. கனரக வாகன உற்பத்தி கம்பனி ஆட்டோ கம்பனி, இரு சீமெந்து உற்பத்திக் கம்பனிகள், உரக் கம்பனி, கப்பல் திருத்தும் கம்பனி உட்பட பல கம்பனிகள் என்பன இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளன. மற்றொரு எரிவாயுக் கம்பனியும் துறைமுக பகுதியினுள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் எரிவாயு விலைகள் எதிர்காலத்தில் குறையும். பல ஹோட்டல்களும் இங்கு புதிதாக கட்டப்பட உள்ளன.

துறைமுகம் காரணமாக அம்பாந்தோட்டை இளைஞர் யுவதிகள் 60 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

இரண்டாம் கட்டப் பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக