27 மார்ச், 2010

எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதற்கு பலமான பாராளுமன்றம் அவசியம்




பொறுப்புமிக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுங்கள் மி ஜனாதிபதி
வெறும் பேச்சுக்களோடு காலம் கடத்துபவர்களை விடுத்து நாட்டுக்குச் சேவைசெய்யக் கூடிய பொறுப்புமிக்க பிரதிநிதிகளை மக்கள் இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்வது முக்கிய மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

விருப்பு வாக்குப் பட்டியலில் முதலா வதாக உள்ளவரன்றி இறுதியாக வருபவர் கூட அமைச்சராகலாம். அதனை நாமே தீர்மானிப்போமெனத் தெரிவித்த ஜானதி பதி; அதனால் விருப்பு வாக்கு விடயங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் 2005ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளில் 95 வீதமானவற்றைத் தம்மால் நிறைவேற்ற முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பலமான பாராளுமன்றம் அவசியமெனவும் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிபிலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுமேதா ஜீ ஜயசேன, ஜகத் புஷ்ப குமார, ஊவா மாகாண முதலமைச்சர் சகூந்திர ராஜபக்ஷ உட்பட மாகாண அமைச்சர்கள், வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-

2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்வைத்து நான் தேர்தலில் நின்றபோது நீங்கள் என்னை வெற்றிபெறச் செய்தீர்கள். அதனை நாம் நிறைவேற்றியுள்ளோம். நாட்டை ஒன்றிணைத்து 95 வீத வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றினோம்.

அதேபோன்று மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பலமான பாராளுமன்றம் தேவை. அதற்காகவே இப்பாராளுமன்றத் தேர்தலை நடத்துகின்றோம். இதன் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட பலமான பாராளுமன்றத்தை அமைப்பது அவசியமாகின்றது.

நாட்டைக் கட்டியெழுப்பவும் நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமயமாக்கவும் பலமான பாராளுமன்றம் அவசியம். மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதனை நிவர்த்தித்து மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. எதிர்க்கட்சியினர் வெறுமனே விமர்சனங்களை முன்னெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பானதே. எனினும் அது நியாயமானதாக இருக்க வேண்டும்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு என ஒரு நிரந்தரமான கட்சி இல்லை. கட்சிக்குள்ளேயே உட்பூசல் போட்டி பொறாமைகள். மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடும் விஜேகோன் என்பவர் இதனால் நேற்று எம்முடன் வந்து இணைந்துகொண்டார்.

பிபிலை மக்கள் பல்லாண்டு காலமாக எம்முடன் உள்ளவர்கள். அவர்களுக்கு நான் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சகல பிரதிநிதிகளும் எனது பிரதிநிதிகளே. அவர்களுக்கு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். அது எனக்கே வழங்கும் ஆதரவு என்பதை மறந்துவிடக் கூடாது.

நேற்று பிபிலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மேற்படி பிரசாரக் கூட்டத்திற்கு முன்பதாக பிபிலை நகரில் 116 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட் டுள்ள போதனா வைத்தியசாலையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மொனராகலை மாவட்டத்தில் இம்முறைத் தேர்தலில் இராமசாமி அழகன் என்ற தமிழர் ஒருவரும் போட்டியிடுகின்றமை குறிப் பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக