27 ஜூன், 2010

உண்மையில், இது செம்மொழி மகாநாடல்ல ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் மாநாடு.




ஈழப் பிரச்சினையிலிருந்தும் ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு உதவிய மத்திய அரசையும் தி.மு.க. அரசையும் மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்பவுமே முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை உள்நாட்டுப் போரில், ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலைக்கு உதவியது இந்திய அரசு. அதற்கு உடந்தையாக இருந்தது தமிழக தி.மு.க., அரசு. அப்பிரசசி“னையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தமிழக முதல்வர் கருணாநிதி, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார்.

செலவுக்குப் பணம் கொடுத்து இலவசமாக பஸ்களில் மாநாட்டு“கு தி.மு.க.,வினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி, அந்த அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. அதற்காக, ம.தி.மு.க., சார்பில் கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை சாலையில் மறிப்பது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம். அங்கு புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.இந்த அணைப் பிரச்னையில் நாங்கள் மத்திய, கேரள அரசுகளுக்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்துகிறோம்“ தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக