27 ஜூன், 2010

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு சார்க் பிராந்திய நாடுகள் தீர்மானம்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது தொடர்பில் சார்க் நாடுகள் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்று வரும் சார்க் வலய நாடுகளது உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிராந்திய வலய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென தெரிவித்துள்ள பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் பிராந்திய ஒற்றுமை சீர் குலைந்துள்ளதுடன் பொருளாதார பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்க் மற்றும் சர்வதேச பிரகடனங்களை முழுமையாக அமுல்படுத்த சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாதம் தொடர்பான முக்கிய தகவல்களை சார்க் பிராந்திய வலய நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார். பயங்கரவாதம், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக