27 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று




தமிழகத்தின் கோவையில் நடை பெற்றுவரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி உரை யாற்றுகிறார். நிறைவு நாளான இன்று பாதுகாப்பு கடமையில் சுமார் 10,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இன்று காலை நடைபெறும் கருத்தரங்கில் நடிகர் சிவகுமார் உரையாற்றுகிறார். ‘வித்தாக விளங்கும் தமிழ் மொழி’ என்ற தலைப்பில் அவர் சிறப்புரை யாற்றவுள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தமிழ் அன்னைக்கு சீர்மிகு மாநாடாக உலகத் தமிழ் செம் மொழி மாநாடு கடந்த 23ம் திகதி கோவை யில் கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சர் கருணாநிதி தலை மையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடக்கி வைத்தார். ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

2வது நாளில் ஆய்வரங்கை முதலமைச்சர் கருணாநிதி தொடக்கி வைத்தார். சிறப்பு மலரை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.

3ம் நாளான காலையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சத்தியசீலனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் என்பன நடந்தன. மாலையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடந்தது. சனிக்கிழமை கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கமும் சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடந்தது.

தமிழ் மொழியின் வற்றாத ஊற்றெடுத்த செம்மொழி மாநா ட்டின் நிறைவு விழாவும், தமிழ் இணைய மாநாட் டின் நிறைவு விழாவும் இன்று மாலை 4 மணி க்கு நடைபெறும். இதற்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா சிறப்பு முத்திரையை வெளியிடுகிறார். முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டு நிறைவு பேரூரையை ஆற்றுவார். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரை ஆற்றுவார். மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன் நன்றியுரை நிகழ்த்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக