24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 3

இலங்கைப் பிரச்சினை யுத்தம் முடியும் தறுவாயில் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை விவகாரத்தை உலகம் உன்னிப்பாக கவனிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வன்னியில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சர்வதேச நிர்ப்பந்தம் ஒருபுறம் இருக்க, இலங்கைப் பிரச்சினை .நா.பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவேண்டும் என்று பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஒஸ்ரியா ஆகிய நாடுகள் மாத்திரமே இலங்கை இனப்பிரச்சினை .நா.பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளன. ரஷ்சியா,சீனா,வியட்நாம் உட்பட பெரும்பாலான நாடுகள் ஈராக், ஆப்கானிஸ்தான் பிரச்சினைகள் இருக்க உள்நாட்டு பிரச்சினையான இலங்கைப் பிரச்சினை விவாதிக்கப்படத் தேவையில்லை என எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நாடுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஒடுக்குமுறைகளில் இருந்து மக்கள் விடுதலையை அடைந்த நாடுகள் என்பது இங்கு கவனிக்கப்படவேண்டும்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு விமானத்தாக்குதல் நடத்துவதை கைவிடவேண்டும்; என அந்நாட்டின் ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஹாயி அமெரிக்காவிடம் கேட்கும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளில் பயங்கரவாத இயக்கப்பட்டியலில் சேர்த்து தடைசெய்துள்ள புலிகளுடனான யுத்தத்தை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்று தென்னிலங்கையில் கண்டனக் குரல் எழுந்துள்ளன. மேற்குலக நாடுகளின் எதிரிகளாக கருதப்படும் சீனா, ரஷ்சியா, ஈரான் போன்ற நாடுகளுடன் இலங்கை நெருங்கிய உறவைப் பேணுவது மேற்குலக நாடுகளுக்கு பொறுக்கவில்லை.

இலங்கையும் யுத்தநிறுத்தம் தொடர்பாக சர்வதேச சமூத்தின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிவதாக காணோம். . நா.மனிதஉரிமை ஆணைக்குழுவின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்காது எனவும் மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கா தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இன்று நடைபெறும் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்களில் காங்கிரஸ் மற்றும் தி.மு.. கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் இலங்கைப் பிரச்சினைக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இந்த நிலையிலும் கடந்த சனிக்கிழமை சென்னைக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் அங்கு ஊடகவியலாளரை சந்தித்தபோது இலங்கை தமிழர்பகுதிகளில் அந்நாட்டு படை கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும் போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதே இந்திய அரசின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் சண்டை விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இலங்கை வாழ் தமிழ் மக்கள் அமைதியான கௌரவமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் கடந்தகாலம் முதல் இன்றுவரை இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் கருத்து இலங்கை அரசு யுத்தத்தை தொடர்வதற்கு இந்தியா வழங்கியிருக்கும் அங்கீகாரமாகவே காணப்படுகிறது.
தமிழ் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னரும் இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டு; தலைவர்களுக்கு ஞாபகத்தில் இருக்குமா என்பது சந்தேகமே.
கடந்த வியாழக்கிழமை வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கு பிரதேசம் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு நீண்ட காலத் திட்டம் ஒன்றை அரசு தயாரித்து வருவதாகவும் இவற்றை நிறைவேற்ற சர்வதேச சமூகம் அரசுக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுள்ளார். சர்வதேச சமூகம் இலங்கையின் நண்பன் எனவும் சர்வதேச சமூகம் இலங்கை மக்களின் உண்மையான நண்பர்களாக புலிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை பிரிட்டனை சேர்ந்த மூன்று பத்திரிகையாளரை வெளியேற்றியுள்ள இலங்கை அரசு சர்வதேச ஊடகங்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் புலிகளிடம் இருந்த கிழக்கு விடுவிக்கப்பட்டாலும் அங்கு பயங்கரவாத செயற்பாடுகள் ஒழிந்தபாடில்லை. இவற்றுக்கு யார் காரணம் என்பதும் வெளிச்சமாகவில்லை.
இன்னொருபக்கம் கிழக்கில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகள் முடிவுறவில்லை. பல இடங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். வன்னியிலும் நாளாந்தம் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி மீட்டு வருகின்றனர். இதுவரை இராணுவத்தால் மீட்கப்பட்ட ஆயுதங்கள் கணக்கில் அடங்காது. பல்லாயிரக்கணக்காகன கண்ணி வெடிகள், கிளேமோர் குண்டுகள், செல்கள், துப்பாக்கிகள், லட்சக்கணக்கான துப்பாக்கி ரவைகள், விமான எதிர்ப்பு பீரங்கி; என பல ரகமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்;கப்படுகின்றன. இவ்வளவு ஆயுதங்களை யுத்தத்தில் பயன்படுத்தாது புதைத்து வைத்ததன் நோக்கம் என்ன என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது. புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பார்க்கும்போது ஆயுத பலம் மட்டும் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களின்போது தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கைகொடுத்தவந்த போதிலும் இனப்பிரச்சினை தொடர்பாகவும், யுத்தம் தொடர்பாகவும் .தே.கட்சி இரட்டை வேடம் போடுவது தொடர்கிறது. வன்னியில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படக்கூடாது என இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்; .தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அரசு புலிகளுக்கு எதிராக கனரக ஆயுதங்களை பாவிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார். அதே வேளை அக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தமிழ் பத்திரிகையில் கவலை தெரிவிக்கிறார். இனப்பிரச்சினை தொடர்பாக எந்த ஒரு நிலைப்பாடும் இல்லாத .தே.கட்சியை முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர். ஆனால் இன்னமும் தமிழ் மக்கள் .தே.கட்சியை ஆதரிக்கின்றனர்.
விடுவிக்கப்படாத இடம் இன்னமும் 5 சதுர கிலோமீற்றரே என அரசு தெரிவிக்கும் நிலையில் விடுவிக்கப்படாத பகுதியில் இன்னமும் ஒருலட்சம் மக்கள் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று ஊடகவியலாளர் மகாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்கருத்தை தெரிவித்துள்ளது. .தே.கூட்டமைப்பின் கூற்றுப்படி ஒரு லட்சம் மக்கள் 5 சதுர கிலோமீற்ற நிலப்பரப்பில் வாழ்வது என்பது சாதாரண விடயமல்ல. யாரைத்தான் நம்புவது பேதை மக்கள்.
உண்மை யுத்தம் முடிவில் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக