தாயகக்குரல் 15
தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காத எந்த வெற்றியும் நிச்சயமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த ஊவா மாகாணசபை, யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகளின் பின்னரே இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடந்து முடிந்த மூன்று இடங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற படுதோல்விகளின் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் முக்கியத்துவம் புரிந்துள்ளது.
இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை தழுவியிருந்த போதிலும் படுதோல்வியடையாமல் ஐக்கிய தேசியக் கட்சியை இதுவரை காப்பாற்றி வந்தது தமிழ் முஸ்லிம் மக்களே. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று இடங்களிலும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. ஊவா மாகாணசபை தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 23
மூ வீத வாக்குகளையே பெற்றிருந்து. வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இந்த தேர்தலில் மிகவும் சொற்ப வாக்குகளையே பெற்றிருந்தன.
ஐக்கிய தேசியக்கட்சியின் தோல்வி குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சி இப்போது பிராந்தியக் கட்சி நிலைக்கு வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களின் இந்த தோல்விகளுக்கு காரணம் இனப்பிரச்சினை தொடர்பாக இவர்கள் இதுவரை இரட்டைவேடம் போட்டு தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஏமாற்ற முயன்றதேயாகும்.
தமிழ் மக்களை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினையே. எனவே தமிழ் மக்கள்pன் மனங்களை யார் வென்றெடுக்க வேண்டுமானாலும் அவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக சொல்வதானால் இனப்பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததே ஐக்கிய தேசியக் கட்சிதான். இனப்பிரச்சினை தீவிரமடைய உரமிட்டவர்கள் சிலர் இப்போதும் ஐக்கிய தேசியக்கட்சியில் மூத்ததலைவர்களாக உள்ளனர்.
கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்ததில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பங்குண்டு. இந்த நிலையிலும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியால்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்கள் மனதில் அப்படிப்பட்ட நம்பிக்கையை ஊட்டிவிட்டவர்கள் தமிழ் தலைவர்களே. குறிப்பாக தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக்கட்சி மற்றும் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவே தமிழ் மக்களுக்கு அந்த நம்பிக்கையை ஊட்டிவிட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இன்று தமிழ் மக்கள் மெல்லமெல்ல உண்மையை உணர ஆரம்பித்துவிட்டனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை ஐக்கிய தேசியக்கட்சி குழப்பியபோதெல்லாம் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அவ்வப்போது சில சிங்களத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடவேண்டும்.
1956 யூன் 5ம் திகதி தமிழ் தலைவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகம் செய்தபோது சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டனர். அது குறித்து 8 யூன் 56ல் லெஸ்லி குணவர்த்தன பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ~~.இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வரவுள்ளது அம்மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போவற்குகூட தீர்மானிக்கலாம். என்று எச்சரித்திருந்தார்.
1956; யூன் 14ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய கொல்வின் ஆர்.டி.சில்வா சிங்களம் மட்டும் சட்டம் எதிர்பாராத விளைவுகளைத் தரும். இரத்தம் வடியும். துண்டிக்கப்பட்ட இரு சிறு அரசுகள் ஒரு அரசில் இருந்து தோன்றக்கூடும். அண்மையில்; வெளியேறிய ஏகாதிபத்தியவாதிகள் மீண்டும் எம்மை ஏப்பமிட ஏதுவாகலாம் என எச்சரித்திருந்தார்.
1957ல் பண்டா- செல்வா ஒப்பந்தம் உருவானபோது அதற்கு எதிராக கண்டியில் இருந்து ஜே.ஆர் ஜெயவர்தனா மேற்கொண்ட பாதயாத்திரை பாதிவழியில் எஸ்.டி. பண்டாரநாயக்காவால் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து பிக்குகள் மூலம் ஐ.தே.கட்சி கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக செல்வாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பண்டாரநாயக்கா பிக்குகள் முன் கிழித்தெறிந்தார். ஒப்பந்தம் கிழித்தெறியும்போது ஓர் எச்சரிக்கையும் அவர் விடுத்திருந்தார்..~~ இதனைக் கிழித்தெறிவதினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும். அது தொடர்பாகவும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்தார்.|| அவர்களுடைய தீர்க்கதரிசனம் போல் தமிழ் மக்கள் மேலம் மேலும் அடக்கி ஆளப்பட்டபோது அவர்கள் பிரிந்து போக முடிவெடுத்தனர். அதற்கு ஆயுதப்போராட்டம்தான் ஒரே வழி என நம்பி ஆயுதம் ஏந்தினர். ஆனால் போராட்டம் வெறும் ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட ஒரு போராட்டமாக தொடர்ந்ததால் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தது.
புலிகளின் தவறான அணுகுமுறையால்தான் போராட்டம் தோல்வியடைந்தது என்பதை இன்று புலி ஆதரவாளர்களும்; ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தேர்தலை மையமாக வைத்து அரசியல் நடத்த இனப்பிரச்சினைக்கு எந்த தீர்வையும் தெரிவிக்காத ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஏற்பட்ட தோல்வியால் எதிர்கட்சிகள் எல்லாவற்றையும் இணைத்து ஒருகூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால்;கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலக்கட்சிகளான தமிழசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் என்பன கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மந்திரிகளாக இருந்துள்ளனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் டி.எஸ்.செனநாயக்காவின் அரசாங்கத்தில் மந்திரியானார். அதை அப்போது கண்டித்த தமிழரசுக்கட்சியினர் 1965ல் ஐக்கிய தேசியக் கட்சியின் 7 கட்சி கூட்டரசில் பங்காளியாகி மு.திருச்செல்வம் கபினெற் அமைச்சரானார். தமிழன் தோலில் செருப்பு தைக்கவேண்டும் என இனவாதம் பேசிய கே.எம்.பி. இராஜரட்ன போன்றவர்களுடன் அந்த அரசில் இணைந்த அந்தகட்சிகளின் வழி வந்தவர்களுக்கு இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில்; சங்கடம் இருக்காது.
.
பொசன ஐக்கிய முன்னணி அரசு கொண்டுவந்த அரசியல் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக ஐ.தே.கட்சியுடனும் ஜே.வி.பி.யுடனும் சேர்ந்து எதிர்த்து அந்த தீர்வை வரவிடாது தடுத்ததுமாத்திரமல்ல பின்னர் இனவாதகட்சிகள் எனக் கூறப்படும் கட்சிகளுடன் ஐ.தே..கட்சி மேடைகளில் கைகோர்த்தவர்கள் என்பதால் இப்போது ஐ.தே.கட்சியுடன் இணைவது ஒன்றும் புதுமையில்லை.
கடந்த ஐந்து வருடங்களாக புலிகளின் போராட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டவர்கள்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். எனவே தமிழ் மக்களின் துயரங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு ஏற்கவேண்டும். தமிழ் மக்களின் அழிவுக்கும் துயரங்களுக்கும் காரணமான புலிகள் இன்று இல்லாத நிலையில் எஞ்சியிருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.
தமிழ் மக்களின் வாக்குகளை இவர்கள் மூலம் பெறலாம் என ஐ.தே.கட்சி கனவு காணலாம். அதே வேளை இவர்களை ஐ.தே.கட்சியில் சேர்ப்பதால் மேலும் சிங்கள வாக்குகளை ஐ.தே.கட்சி இழக்கநேரிடும்;. ஐ.தே.கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைப்பதில் தமிழ் ஊடகங்களே அதிக அக்கறை காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக