22.07.2009 தாயகக்குரல் 12
ஏமாற்றலாம் என்று எண்ணுகின்றது. .மக்கள் ஏமாறுவார்களா
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் தமிழ் மக்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வோ, யதார்த்தமான அணுகுமுறையோ இல்லாதிருந்ததால் அது வளர்ச்சி பெற்றது. பல இனக்கலவரங்களைத் தொடர்ந்து 1983 ஆடி கலவரத்தின் பின்னர் இனப்பிரச்சினை தீவிர ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.
ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்மூலம் ஒருதீர்வை ஏற்படுத்தியது. இந்த தீர்வு தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக தீர்க்காவிட்டாலும் இனப்பிரச்சினைக்கான ஓர் ஆரம்பதீர்வாக புலிகள் உட்பட தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்த பிரதமர் பிரேமதாசா ஜனாதிபதியானதும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உதவியாக இலங்கை வந்த இந்திய படையினரை வெளியேற்ற புலிகளை கூட்டு சேர்த்தார்.
இந்தியப்படை வெளியேறியதும் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர்மூண்டது. இடையிடையே பலமுறை யுத்தநிறுத்த ஒப்பந்தங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் நடைபெற்றபோதிலும் இனப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. காரணம் புலிகள் ஈழத்தை தவிர வேறு எந்த தீர்வையும் எதிர்பார்க்கவில்லை.
இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், பலகோடிக்கணக்கான சொத்துகள் அழியவும் சுமார் மூன்று லட்சம் மக்கள் அகதிகளாகவும் காரணமான ஈழயுத்தம் இன்று முடிவுற்ற நிலையில் இன்று வடக்கில் வவுனியா நகரசபை, யாழ்ப்பாணம் மாநகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுவரைகாலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய உள்ளுராட்சித் தேர்தல்களை பகிஷ்கரித்து அதில் பங்குபற்றுவோரை துரோகிகள் என் முத்திரை குத்திவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய பல கட்சிகளும்; இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
சரியோ பிழையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு ஒரு நிலையான கொள்கை உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டமைப்பாகும். தங்கள் தலைவர்களையும் ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி படுகொலை செய்த புலிகளை தங்களது பாராளுமன்ற பதவிக்காக தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட கட்சிகளின் கூட்டாகும். இவர்கள் கூட்டு சேருவதற்கு முன்னர் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொண்டவர்கள்.
புலிகளின் தலைவர் மரணிக்கும்வரை ஈழம்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறிவந்தவர்கள் புலிகளின் தோல்விக்குப் பின்னர் உடனடியாக தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டனர். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல்ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கிறோம். தவறுகளை உணர்ந்து திருந்தாவிட்டால் எமது இனம் எம்மை குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐக்கியம், இறைமை என்பவற்றுக்கு பங்கம் ஏற்படாதவரையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா இப்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சரியாகவோ பிழையாகவோ மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு சென்றவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இவர்கள் கட்சி மட்டத்தில் இனப்பிரச்சினை பற்றி விவாதித்து ஒரு தெளிவான முடிவு எடுக்காத காரணத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர்.
தமிழீழம் கேட்கவில்லை என்று ஒரு தருணத்தில் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன்.
கடைசி தமிழன் இருக்கும்வரை போராட்டம் என்றார் மாவை சேனாதிராசா.
தமிழீழம் அமைக்கவேண்டும் என்றார் ஜெயானந்தமூர்த்தி.
யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம்; பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உ. இரா.சம்பந்தன் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் அப்படி நீடித்தால் அச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழர்கூட நாட்டில் இருக்கமாட்டார்கள் என்று கூறியிருந்தார். அப்படிப்பட்ட யுத்தத்தை நிறுத்த் இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
2008ம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற டட்லி சேனநாயக்க நினைவுதினக் கூட்டத்தில் பங்குபற்றி உரையாற்றிய இரா.சம்பந்தன் டட்லி - செல்வா ஒப்பந்தம் அரசியல் தீர்வுக்குரிய சரியான யோசனை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதைவிடவும் மேலான பண்டா-செல்லவா ஒப்பந்தம் ஏற்பட்டது இவருக்குத் தெரியாதுபோலும்.
சந்திரிகா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கொண்டுவந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை இனவாத கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் எதிர்த்தது. .பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்டம் தமிழ் நாட்டு அரசுக்கு இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் கொண்;டது என இந்திய அரசியல் வல்லுனர்களே தெரிவித்திருந்தனர். இந்த தீர்வுத் திட்டதை இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தது மாத்திரமன்றி அதன் பின்னர் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் கைகோர்த்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர்.
தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை மாற்றப்படவேண்டும் என்று தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் 2001ம் ஆண்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றவேண்டும் எனவும் அரசியலமைப்பை மாற்றுவதற்கு மக்கள் விரும்புகிறார்களா என்பதை அறிய சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்போவதாகவும் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கா அறிவித்திருந்தார். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி மத்திய குழு 5.08.2001 ல் கூடி அரசியலமைப்பு மாற்றம் தேவையில்லையென மக்கள் வாக்களிக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. இந்த அரசியலமைப்பை மாற்றாமல் இன்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொண்டுவரமுடியாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. த.வி.கூட்டணி எடுத்த தீர்மானத்துக்கு காரணம் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவான காலம் முதல் இதுவரை தமிழ் மக்களின் துன்பங்களுக்கு பட்டியல் போட்டார்களே அன்றி அந்தத் துன்பங்களுக்கு முடிவு கட்ட அரசியல் தீர்வை ஒருநாளும் வற்புறுத்தவில்லை. இப்போது அரசியல் தீர்வை கூறி மக்களிடம் வருகிறார்கள்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றியபோதிலும் தேசியம் என்ற மாயையால் மக்களை தொடர்ந்து?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக