யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இருபத்தைந்து வருட இடைவெளியின் பின்னர் வீடுவீடாகத் தேர்தல் இடாப்பு பதியும் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான பயிற்சி வகுப்புகளை யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.குகநாதன் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள கிராம அலுவலர்களுக்கு வழங்கி வருகின்றார்.
இருபத்தைந்து வருட இடைவெளியின் பின்னர் நடைபெறும் தேர்தல் இடாப்பு திருத்தும் பணிகள் யாழ். குடாநாட்டில் உள்ள மக்களிடையே பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்தில் தமக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுமோ என்ற பரிதவிப்பில் அவர்கள் வேதனையுடன் காணப்படுகின்றனர்.
அதேவேளை, இம்முறை கடந்த காலங்களைப் போலல்லாது வீடுவீடாகக் கிராம அலுவலர்கள் சென்று உரிய படிவங்களைக் கொடுத்து நிரப்பவுள்ளதுடன் குடும்பமாக வெளிநாடுகளில் வதிபவர்களின் பதிவுகளை ரத்துச் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்பவர்கள், தாம் வதியும் இடங்களிலேயெ தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல், புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டனர். மரணமடைந்தவாகளின் பெயர்களும் நீககப்பட்டே வந்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக