25 ஜூன், 2010

23 வகையான இரசாயன பொருட்களுக்கு கட்டுப்பாடு அதிகார சபை அமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இரசாயன திரவியங்களுள் 23 வகையான இரசாயனப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கென அதிகார சபை ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 23 வகையான இரசாயன பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே. கமகே தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள், போதை உண்டாவதற்காக சில மருந்து வகை களை, இரசாயனப் பொருட்களை எடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே தெரிவு செய்யப்பட்ட மேற்படி 23 இரசாயனத் திரவியங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

போதைவஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நாளை 26ம் திகதியாகும். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவி லேஷா டி சில்வா, முன்னாள் பொலிஸ் மா அதிபரும், போதைவஸ்து பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளருமான விக்டர் பெரேரா, கொழும்பு திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பெட்ரீசியா யூன் மோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிடுகையில்,

இரசாயனங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இரசாயன திரவியங்களை கட்டுப்படுத்துவதற்கென ‘அடிப்படை இரசாயன கட்டுப்பாட்டு அதிகார சபை’ ஒன்று உருவாக்கப்படவுள்ளது என்றார்.

சுமார் மூன்று மாத காலத்திற்குள் இந்த அதிகார சபை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதடதித” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சில மருந்து வகைகள் தற்போது கட்டாயக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. போதைப் பொருளுக்கு அடிமையாவதையும், போதை பொருளுக்கு அடிமையாவர்களை மீட்டெடுப்பதுமே இந்த திட்டத்தின் பிரதானமான நோக்கமாகும்.

விண்ணப்பங்கள் கோரப்பட்டு அனுமதிப் பத்திரங்கள் அடிப்படையிலேயே இரசாயனத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மருந்துச் சிட்டை இல்லாது பாமசிகளில் மருந்துகள் வழங்க முடியாது. அவ்வாறு மருந்துகள் வழங்கிய பல பாமசிகள் சுற்றி வளைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலங்களிலும் எந்த ஒரு பாமசியி லாவது மருந்து சிட்டை இல்லாமல் மருந் துகள் ழங்குவது தொடர்பாக தகவல் தெரிய வ்ந்தால் 0112 868794-6 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ, பணிப்பாளர் நாயகம், தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, இலக்கம் 383, கோட்டே வீதி என்ற முகவரிக்கோ அறியத்தருமாறும் வேண்டு கோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக