25 ஜூன், 2010

இடம்பெயர்ந்த மக்கள் நலன்கருதி ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம்








இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு பிரதேச மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை வேறுநபர்கள் அபகரிப்பதைத் தடுப்பதற்காக ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். 30வருடகால யுத்தம் முடிவடைந்து வடக்குகிழக்கில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களின் காணிகளை வேறுநபர்கள் சட்டவிரோதமாக அபகரிக்க வாய்ப்புள்ளதாக இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வருடங்கள் எவரும் காணியில் தொடர்ச்சியாக குடியிருந்தால் குறித்த நபருக்கு அக்காணியை பெறுவதில் அதிக அவகாசம் காணப்படுகிறது. இச்சட்டத்தின்படி இடம்பெயர்ந்த மக்களுக்கு அநீதி ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த ஆட்சியுரிமைச் சட்டத்தை திருத்த நீதி ஆணைக்குழு சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக