25 ஜூன், 2010

மஹிந்த தேரரின் தம்மபோதனை புதிய பாதைக்கு இட்டுச் செல்கிறது’ பொசன் செய்தியில் ஜனாதிபதி


அரஹத் மஹிந்த தேரரினால் போதிக்கப்பட்ட தம்ம போதனை எமது சமூகத்தையும், கலாசாரத்தையும் புதியதொரு பாதையை நோக்கி இட்டுச் செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொசன் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொசன் பெளர்ணமி தினம் புத்தபெருமானின் தம்ம போத னையை அரஹத் மஹிந்த தேரர் கொண்டு வந்ததை எமக்கு ஞாபகமூட்டுகின்றது என்றவகையில், இலங்கை எங்கும் வாழும் பெளத்த சமூகத் திற்கு மிகவும் புனிதமான பண்டிகையாகும். இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பண்டிகையின் இரண்டாயிரத்து முன்னூற்றிப் பதினெட்டாவது பண்டிகையை முழு தேசமும் ஐக்கியத்தோடு கொண்டாடக் கிடைத்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அரஹத் மஹிந்த தேரரினால் போதிக்கப்ப ட்ட தம்ம போதனை இன, மத வேறுபா டுகளை மறந்து ஒரே நாட்டின் குடிமக்களாக இன நல்லுறவுடன் வாழ்வதற்கான பாதையை எமக்குக் காட்டியது. அன்பையும் கருணையையும் விரும்புகின்ற உணர்வினால் உந்தப்பட்டு ஒழுக்க விழுமியங்களின் அடி ப்படையில் வன்முறைகள் இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு தேசமாக நாம் உறுதிகொண்டோம். அர ஹத் மஹிந்த தேரரினால் முன்வைக்கப்பட்ட சமாதானமும் அமைதியும் நிறைந்த பாதையைப் பின்பற்றியதன் மூலம் நாம் உலக நாடுகளுக்கு மத்தியில் ஒரு பெருமைமிகு வரலாற்றுக்கு சொந்தக்காரர்களானோம்.

அரஹத் மஹிந்த தேரர் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் ஒரு சிறந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு நாடு இன்று ஒன்றுபட்டுள்ளது. ஒன்றுபட்டு உழைப்பதன் மூலம் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும். அன்பு மற்றும் கருணையின் அடிப்படையில் நாம் நல்லிணக்கத்தினைக் கொண்டுவர வேண்டும். பிரிவினைகள் எம்மை தோல்வியின்பால் இட்டுச் செல்லும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எமது அரச கொள்கை எப்போதும் தம்ம போதனைகளின் அடிப்படையில் வழிகாட்டப்பட்டுள்ளது.

‘தம்ம போதனைகளுக்கேற்ப வாழுகின்ற ஒருவன் அதன் மூலமே பாதுகாக்கப்படு வான்’ என்ற அரஹத் மஹிந்த தேரரின் போதனைகளை எமது வாழ்வில் ஏற்று நடப்பதன் மூலம் இந்த பொசன் காலப் பகுதியை அர்த்தமிக்கதாய் மாற்றி புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப் புவதற்கு எம்மை அர்ப்பணிப்போம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக