26 ஜூன், 2010

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த இணையத்தில் அபாண்ட செய்திகள்

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த இணையத்தில் அபாண்ட செய்திகள்
லண்டனுக்கு தப்பியோடிய சூத்திரதாரி அம்பலம்; உடனடியாக கைது செய்ய ‘இன்ரபோல்’ நடவடிக்கை

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்ட ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத் தளத்தை இயக்கி வருபவர் இலண்டனுக்குத் தப்பிச் சென்ற சந்திமா அனில் விதானாராச்சி என்பது குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இவர் நீதிமன்றத்திற்குச் சமுகமளிக்காமை காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்குப் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையில் தமது மனைவியுடன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவர் இலண்டனுக்குத் தப்பிச் சென்றிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய உடனடியாக இவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் (இன்ரபோல்) நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி சந்திமா அனில் விதானாராச்சி ஒரு தேடப்படும் நபராக இன்ரபோல் அறிவிப்புச் செய்திருக்கிறது. போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாக இன்ரபோலின் எச்சரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘லங்கா நியூஸ் வெப்.கொம்’ என்ற பெயரில் ரகசியமான ஓர் இணையத்தைப் பதிவு செய்துள்ள அவர் மறைமுகமாக அதனை நடத்தி வந்திருக்கிறார். ஆகவே, அவரது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் எவ்வாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தின் ஏனைய உயர் உறுப்பினர்களையும் அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் செய்திகளைப் புனைந்து வெளியிட்டார் என்பது புலனாகுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

லண்டனில் உள்ள வீட்டிலிருந்து இணையத்தளத்தை நடத்திய விதானாராச்சியுடன் இலங்கையிலிருந்தும் பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான இவர்களின் விபரங்களையும் திரட்டி விட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகிறார்கள்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் சில ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உதவி பெறும் முயற்சியில் விதானாராச்சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சிக்கு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஐரோப்பாவில் உள்ள சில ஊடகவியலாளர்கள் ஒத்துழைப்புகளை நல்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ங்காநியூஸ்வெப் இணையத்தளம் பிரிட்டனின் சட்ட திட்டங்களுக்கு உட்படாத வகையிலேயே நடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக்க பிரித்தானிய மண்ணைப் பயன்படுத்தியமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நந்திக்கடல் ஏரியில் இறந்த மனித சடலங்களை அப்புறப்படுத்தும் பணியை சீன நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் பொறுப்பளித்திருந்ததாகக் கடந்த வாரம் ஒரு பரபரப்புச் செய்தியை குறித்த இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியானது நேச நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகுமென அரசாங்கம் கருதுகின்றது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

விதானாராச்சி இலங்கையில் தேட ப்படும் நபர் என்ற விடயத்தை வெளி யிடாமல், அவர் பிரிட்டன் குடியு ரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக