12 ஆகஸ்ட், 2010

ரூ. 180 கோடி 16 கிலோ ஹெரோயினுடன் மூன்று ஈரானியர்கள் கைது

180 கோடி ரூபா பெறுமதியான மிகவும் அபூர்வமாகக் கிடைக்கும் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று ஈரானியப் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இரு ஈரானியப் பிரஜைகளைச் சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 8 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன் உள்ளூர்ப் பெறுமதி 90 கோடி ரூபாவாகும்.

இவர்கள் இருவரையும் கைது செய்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையின் போது கொழும்பில் வைத்து மேலுமொரு ஈரானியப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்ட லொன்றில் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து மேலும் 8 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதியும் 90 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ் என்று இனங்காணப்பட்டுள்ள சீஹசிசிலீஙு ஹசீஙீகீலீசிஹசீடுடூலீ என்ற இந்த வகை ஹெரோயின் மிகவும் அபூர்வமானது. இந்த வகையிலான 8 கிலோ ஹெரோயின் சந்தேக நபர்களிடம் இருந்து பிடிப்பட்டு ள்ளது. இந்த 8 கிலோ ஹெரோயின் போதைவஸ்து இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். சந்தேக நபர்களின் பயணப்பொதிகளில் எக்ஸ்ரே இயந்திரங்க ளுக்கு அகப்படாத வகையில் சூட்சுமமாக இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய சுங்கத்தின் பிரதி பணிப்பாளர் ஜே. கொடிதுவக்கு கூறினார்.

எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், விமான நிலைய சுங்கத்தின் உதவி சுப்ரின்டென் சமயோசிதத்துடன் இதனைக் கண்டுபிடித்து சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் 30 வயதும் மற்றவர் 35 வயதும் உடையவர்கள்.

நேற்று அதிகாலை மூன்று மணியளவில் இவர்கள் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிய வருகிறது. மேற்படி அபூர்வ ஹெரோயின் வஸ்து மிகவும் விலை கூடியது. இதன் ஒரு கிராமின் விற்பனை விலை சுமார் 985 அமெரிக்க டொலர்கள் ஆகும். இதுவரை மூன்று முறை மட்டுமே இந்த ஹெரோயின் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக