13 மார்ச், 2010

உள்நாட்டுச் சூழ்ச்சிகளை முறியடிக்க உழைக்கும் வர்க்கம் தயாராக வேண்டும்


உள்நாட்டிலிருந்து எழும் அழுத்தங்கள் சூழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க உழைக்கும் வர்க்கத்தினர் தயாராக வேண்டுமென சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தெரிவித்தார்.

தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். எதிர்வரும் 8ம் திகதி நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி அதற்கு சிறந்த வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிமஹிந்த சிந்தனைபீ எதிர் காலத் திட்டத்தைத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு விளக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் அலவி மெளலானா தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

தொழிலாளர் வர்க்கம் எப்போதும் ஜனாதிபதியுடனேயே உள்ளது. கடந்த தேர்தலிலும் அவர்கள் முழுமையான ஆதரவினை வழங்கினர்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை 75 வீதமானோர் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கே தமது முழுமையான ஆதரவினை வாங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக