13 மார்ச், 2010

தபால் அலுவலகங்களுக்கும் தபால்காரருக்கும் பாதுகாப்பு சுவரொட்டிகள், பனர்கள் நாளைக்குள் அகற்ற நடவடிக்கை தபால்காரர் செல்லும் வீதிகளில் விசேட பொலிஸ் ரோந்து






வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க ப்படும் தினங்களில் சகல தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று தேர்தல்க ளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

எதிர்வரும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையும் நாடு பூராவும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதன் நிமித்தமே இப்பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சட்ட விரோத சுவரொட் டிகள், பதாகைகள், பனர்கள் என்பவற்றை நாளை 15ம் திகதிக்குள் முழுமையாக அகற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிரு ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன மேலும் கூறுகையில்:- ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின் நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையும் நாடு முழுவதும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இதன் நிமித்தம் தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவென தபால்காரர்கள் செல்லும் ஒவ்வொரு வீதியிலும் பொலி ஸார் விஷேட பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர். இப்பணியில் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலைய பொலிஸார் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்.

இதேநேரம், எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகள் விஷேடமாக விநியோகிக்கப்படும். அத்தினத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுவதில் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளத் தவறுகின்றவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேவேளை சட்டவிரோத சுவரொட்டிக ளையும், பதாகைகளையும், பெனர்களையும், அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளைக்குள் அவற்றை அகற்ற முடியுமென நம்புகின்றேன். இதற்கு வேட்பாளர்களதும் பொது மக்களினதும் ஒத்துழைப்பையும் கோரியுள் ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக