13 மார்ச், 2010

சர்வதேசத்தில் 2/3 பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு சாதக நிலைப்பாடு





சர்வதேசத்தில் உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான் மையான நாடுகள் இலங்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த நாடுகளின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான நாடுகள் இலங்கைக்குச் சாதகமாகவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பில் மேற்கொள்ள உத்தேசித் துள்ள நடவடிக்கையைக் கண்டித்து அணிசேரா நாடுகளின் தலைவரான எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அணிசேரா அமைப்பில் உள்ள 124 நாடுகளின் சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது- ஐ.நா. சபையில் அங்கத்துவம் பெறும் 194 நாடுகளில் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைவிட அணிசேரா நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதுபூ என்று அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

புஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்தும் யோசனையொன்றை 16 நாடுகள் இணைந்து முன்வைத்தன. இதனையடுத்து, ஆணைக்குழுவுக்கு வருமாறு இலங்கைக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. இலங்கை முன்வைத்த யோசனை ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சரத் பொன்சேகா முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை வெளியிட்டதால் முடிந்த பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. நானும் (அமைச்சர் சமரசிங்க) சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸரூம் ஜெனீவா சென்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் வேறு நாடுகளின் தூதுவர்களுக்கும் நிலைமையை விளக்கினோம். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்வைத்த ஆவணம் சட்ட வலுவற்றது.

விசாரணைக்காக அல்ல என்று கூறப்பட்டபோதிலும், அவர்கள் குறிப்பிட்டதைப்போல் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான சம்பவங்கள் குறித்து ஆராய ஆறுபேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்தார். அந்தக் குழு ஏப்ரல் மாதம்வரை தனது விசாரணைகளை மேற்கொள்ளும்.

இந்தப் பின்னணியில்தான், போர்க்கால சம்பவங்கள் குறித்து ஆராய நிபுணர்கள்கொண்ட குழுவொன்றை நியமிக்க எண்ணியுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பாக்கி மூன் கடந்த மார்ச் இரண்டாந் திகதி ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பின்னர், தொலைபேசியூடாகவும் ஜனாதிபதியைத் தொடர்புகொண்டார். அப்போது அந்தக் குழு நியமிக்க வேண்டிய அவசியம் இல்லையென ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும் நேற்று முன்தினம் அணிசேரா நாடுகளின் தலைவர்பான் கீ மூனின் உத்தேச செயற்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தகவல் தருகையில்; ஐ.நா. வுக்கான வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன மேற்கொண்ட தொடர்பாடல்களை அடுத்தே அணிசேரா நாடுகளின் தலைவர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக