13 மார்ச், 2010

நலன்புரி நிலைய மக்கள் வாக்களித்தல் மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் புளொட் தலைவர் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சு-





முன்னிட்டு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்றுப் பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து தேர்தல் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது தேர்தல் வன்முறைச் சம்பவங்கள், தேர்தல் சட்டங்களை மீறுதல், அரசியல் பழிவாங்கல்கள், அரச சொத்துக்களைப் பயன்படுத்துதல், அரச உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்டுக்கள் போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வன்னி தேர்தல் தொடர்பில் கருத்துரைத்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலைய வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும், முகாம்களில் இருக்கும் மக்கள் வாக்களிப்பதற்கு இம்முறை உரிய வழிமுறைகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென்பதுடன், முகாம்களுக்குள்ளோ அல்லது முகாம்களுக்கு அருகாமையிலுள்ள இடங்களிலோ அவர்கள் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தூர இடங்களுக்குச் சென்று வாக்களிக்கும் நிலை காணப்பட்டதாலும், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் பலர் வாக்களிக்க முடியாமற் போனது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயத்தில் இம்முறை உரிய வழிவகை செய்யப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக