13 மார்ச், 2010

மனித உரிமைகளை உறுதிப்படுத்த 5 ஆண்டு தேசிய செயல் திட்டம் முதற்கட்ட பணிப்பூர்த்தி; சர்வதேசத்திடம் கையளிக்கவும் ஏற்பாடு


மனித உரிமைகளை உறுதிப்படுத்து வதற்கான தேசிய செயல்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய செயல்திட்டம் முழுமைப்படுத்தப் பட்டதும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தப்படுமென்று கூறிய அமைச்சர், அதனை ஐரோப்பிய ஆணைக் குழுவுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

பூமனித உரிமைகள் விடயத்தில் பிர ச்சினை இல்லை என்று நாம் கூற வில்லை. பல சவால்களும் உள்ளன.

எனவேதான் 2010 முதல் 2015 வரையிலான ஐந்தாண்டு தேசிய செயல்திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம்பூ என்று அமைச்சர் கூறினார். செயல்திட்டம் பூர்த்தி செய் யப்பட்டதும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். ஒன்றரை வருடத்துக்கு முன்னரே இதற்கான பணிகள் ஆரம்பமானதாகக் கூறிய அமைச்சர் இது வெறுமனே ஜீ.எஸ்.பீ சலுகைக் காகவன்றி பொதுவாக நிலைப்பா ட்டை எடுத்துரைக்கும் திட்டமாக இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக