13 மார்ச், 2010

கட்சி சார்பாகப் பொலிஸார் செயற்பட்டால் கடும் நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்


எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சி சார்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக பொறுப்புடைய பொலிஸ் சேவையில் கட்சிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ பொலிஸார் உதவக் கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பக்கச் சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் கட்டாய விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்டதுடன் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக